News
Tuesday, February 21, 2017
லைப் டைம் முழுவதும் குரல் அழைப்புகள் இலவசம்..! மீண்டும் பல சலுகைகளை அறிவித்தார் முகேஷ் அம்பானி..!
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார். ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ள அனைவருக்கும் இது ஒரு மைல்கல் என்றும், ஜியோ நெட்வொர்க் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஜியோ உருவாக்கியுள்ளதாகவும், 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது பெறும் மிகிழ்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானி என்னவெல்லாம் கூறினார் என்று இங்குப் பார்ப்போம்.
170 நாட்களில் ஜியோ நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.
மொபைல் இண்டெர்னெட் பயன்படுத்துவதில் உலகளவில் இந்தியா தான் முதல் இடம்.
தினமும் 5.5 கோடி மணி நேரம் ஜியோ நெட்வொக்கில் வீடியோக்களை பார்த்து வாடிக்கையாளர்கள் மகிழ்கின்றனர்.
ஏப்ரல்1 முதல் எல்லாக் குரல் அழைப்பு திட்டங்களிலும் ரோமிங் உட்பட எல்லா இடங்களிலும் இலவசமாக அழைக்கலாம்.
ஒவ்வொரு நாளும் ஜியோ நெட்வொர்க்கினை வலுவாகவும், வேகமாகவும் பயன்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஜியோ நெட்வொர்க் மூலம் தினமும் 200 கோடி நிமிடங்கள் வரை இலவசமாகக் குரல் அழைப்பி செய்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் உலகைப் பொருத்த வரை தரவு தான் ஆக்சிஜன்.
ஜியோ நெட்வொர்க்கில் துவக்கம் முதல் ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர்.
அனைத்து நிறுவனங்களின் டெலிகாம் திட்டங்களையும் கவனித்து அவர்களை விட 20 சதவீதம் அதிக பயனையே ஜியோ அளிக்கும்.
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெறுவார்கள்.
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளை 303 ரூபாய் பேக் மூலமாக அறிமுக விலையில் 30 நாட்களுக்குப் பெற முடியும்.
மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்கு பிரிமியம் மெம்பர்ஷிப் பெறுவதன் மூலம் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஜியோ நியூ இயர் ஆஃபரை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.
No comments :
Post a Comment