News
Friday, March 31, 2017
Saturday, March 25, 2017
ANNA UNIVERSITY, TIME TABLE - B.E/B.Tech/ B.Arch. DEGREE EXAMINATIONS - APRIL/MAY - 2017
ANNA UNIVERSITY, CHENNAI - 600 025
TIME TABLE - B.E/B.Tech/ B.Arch. DEGREE EXAMINATIONS - APRIL/MAY - 2017
(REGULATIONS-2013)
Just follow the instruction to get your timetable
filesquick.net/file/361B9D
Friday, March 24, 2017
Thursday, March 23, 2017
ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்
ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்
ஸ்மார்ட் கார்டுகள் ஐந்து வகைகளில் இருக்கும்.
✓ கார்டில் புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
✓ 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும்.
✓ என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும்.
✓ 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை மட்டும்.
✓ 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.
✓ ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும்.
✓ அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என அச்சிடப்பட்டிருக்கும்.
✓ அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும்.
✓ பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்., (QR) என்ற ரகசிய குறியீடு இருக்கும்.
✓ கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.
✓ ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
Wednesday, March 22, 2017
Monday, March 20, 2017
Wednesday, March 15, 2017
கர்ப்ப கால தொற்றுநோய்களை தவிர்க்கலாமே..!
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சில தொற்றுநோய்கள் நஞ்சுக்கொடி வழியாக கருவில் இருக்கும்போதோ, பிறக்கும்போதோ குழந்தையையும் பாதிக்கலாம். இதனால், சாதாரண காய்ச்சலிலிருந்து குறைப்பிரசவம், பிறப்பு கோளாறு, பிரசவ மரணம் போன்ற பல ஆபத்துகள் ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றியும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்...
வைரஸ், பாக்டீரியாக்கள் மனிதனுக்குப் பல்வேறு தொற்றுநோய்களை வரவழைப்பவை. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள Antibodies இந்த தொற்றுகளை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டிருப்பினும், ஆன்ட்டிபாடிகளின் உற்பத்தி குறைவாக உள்ள நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதால் எளிதில் நோய்வாய்ப்படக் கூடும்.
இயல்பாகவே கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கு தொற்றுநோய்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஹெபடைடிஸ் பி
கர்ப்ப காலத்தில் கல்லீரலை பாதிக்கும் தொற்றுநோய்தான் ஹெபடைடிஸ் பி. இந்த தொற்றினால் தாய்க்கு ஏற்படும் மஞ்சள் காமாலை கருவிலுள்ள குழந்தைக்கும் பரவுகிறது. இறப்பு, எடை குறைவான குழந்தை மற்றும் குறைப்பிரசவத்துக்கு ஹெபடைடிஸ் பி தொற்று வழி வகுக்கிறது. எனவே, கருவுறுவதற்கு முன்பே ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.
ஹெபடைடிஸ் சி
ஹெபடைடிஸ் சி தொற்று இருப்பதை குமட்டல், வாந்தி போன்ற அறிகுறி மூலம் கண்டறியலாம். கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் சாதாரணமானது என்ற குழப்பத்தால் இந்த பாதிப்பை கண்டறிவது கடினமாக இருக்கிறது. எனவே, கருவுறுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
சிறுநீர்ப்பாதை தொற்றுநோய்கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி வரும் தொற்று நோய் இது. சருமம், பிறப்புறுப்பு மற்றும் மலக்குடலில் இருந்து பாக்டீரியாக்கள், வடிகுழாய் வழியாக உடலுக்குள் நுழைகின்றன. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையில் தங்கி, பெருகி பின்னர் சிறுநீரகத்துக்குள் நுழைந்து சிறுநீரகத் தொற்றையும் ஏற்படுத்திவிடும்.
சின்னம்மை
தாய், சேய் இருவருக்குமே பல்வேறு சிக்கல்களைத் தருகிறது கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் சின்னம்மை. கர்ப்பிணிகள் ஆரம்பத்திலேயே சின்னம்மைத் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது நல்லது.
ஹெர்பஸ்
கர்ப்ப காலத்தில் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ்(Herpes simplex) எனும் வைரஸால் பிறப்புறுப்பில் தொற்றுநோய் ஏற்படுகிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட துணையுடன் உடலுறவில் ஈடுபடும்போது மனைவிக்கும் இந்நோய் பரவிவிடுகிறது. முதல் மூன்று மாதங்களுக்குள் ஏற்படும் தொற்றுநோயை குணப்படுத்திவிடலாம். ஆனால், மீதமுள்ள மாதங்களிலும் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தால் குழந்தையை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் வெளியே எடுக்க வேண்டி வரும். நார்மல் டெலிவரி என்றாலும் பிறக்கும் குழந்தைக்கும் ஹெர்பஸ் பரவிவிடும் சிக்கல் உண்டு.
தட்டம்மை
தட்டம்மை என்கிற ருபெல்லா வைரஸ் தாக்கப்பட்டிருந்தால் ஃப்ளூ காய்ச்சலைப்போல கண்கள் சிவத்தல், மிகுதியான காய்ச்சல், நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தட்டம்மையால் கருவில் உள்ள குழந்தையின் பார்வை மற்றும் கேட்கும் திறன் பாதிப்படையலாம். குழந்தையின் மூளை மற்றும் இதயம் பாதிக்கவும் வாய்ப்பு அதிகம்.
குரூப் பி ஸ்ட்ரெப்டோகாக்கஸ்பெண்களின் சிறுகுடலிலும், பிறப்புறுப்பிலும் இருக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாக்கள் கர்ப்பத்தில் இருக்கும்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பிரசவத்தின்போதோ பிரசவத்துக்கு நெருங்கிய நிலையிலோ பாதிப்பு ஏற்பட்டால் குழந்தை பாதிக்கப்படும். ஏற்கெனவே முதல் பிரசவத்தில் இந்தப் பிரச்னை இருந்திருப்பின் இரண்டாவது குழந்தையும் பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே, பிரசவ நேரத்தில் இதற்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் குறைமாத பிரசவம், முன்னதாகவே பனிக்குடம் உடைதல் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகளை நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்
* ஒவ்வொருமுறை பாத்ரூம் போய்விட்டு வந்தபிறகும் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். இதேபோல் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுடன் விளையாடிய பிறகும், சமையலுக்கு மீன், மாமிசம் மற்றும் காய்கறிகள் நறுக்கிய பிறகும் கைகளை அலம்புவது அவசியம்.
* நன்றாக சமைத்த பிறகே உண்ண வேண்டும். பாதி வெந்தவற்றை உண்ணக்கூடாது. குறிப்பாக அசைவ உணவுகள்.
* பதப்படுத்தப்படாத பால் பொருட்கள், காய்ச்சாத பால் போன்றவை ஆரோக்கியத்துக்குக் கேடு.
* கர்ப்பிணிகள் தாங்கள் பயன்படுத்தக்கூடிய தட்டு, டம்ளர் போன்ற பாத்திரங்களை மற்றவர்களுடன் பகிராமல் இருப்பது நல்லது.
* வீட்டில் செல்லப் பிராணிகளுக்கு வைக்கும் தட்டு போன்றவற்றை கர்ப்பிணிகள் சுத்தம் செய்யக் கூடாது. அதனுடன் நெருங்கிப் பழகுவதும் கூடாது.
* கணவர் ஏதேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பான, சுகாதாரமான உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தேவையற்ற பால்வினை நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
* முறையான கால இடைவெளிகளில் மருத்துவரின் அறிவுரைப்படி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். அந்தந்த காலத்துக்கு தவறாமல் மருத்துவ பரிசோதனைகளும் அவசியம்.
* சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படாமல் இருக்க தண்ணீர் போதுமான அளவு அருந்த வேண்டும்.
* ஏதேனும் உடல்நலக்குறைவு இருப்பது தெரிந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.
Plus two march 2017 Chemistry question paper answer key
Plus two march 2017 Chemistry question paper answer key
Click below link
Tuesday, March 14, 2017
பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை: பாட்டில் இளநீர் அறிமுகம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி நடந்த இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தின்போது, பன்னாட்டு குளிர்பானங்களை அருந்த மாட்டோம் எனக் கூறினர். அதன் எதிரொலியாக, வியாபாரிகள் சங்கங்களும் மார்ச் 1 முதல் தமிழகத்தில் உள்ள கடைகளில் பன்னாட்டு குளிர்பானங்களை விற்க தடை விதிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, பெரும்பாலான கடைகளில் குளிர்பானங்கள் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நீரா நா.பெரியசாமி பேசும்போது, “உடல் இயக்கத்துக்கு தேவையான அனைத்துவித தாது உப்புகளும், தேவையான குளிர்ச்சி, இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்களில் வெப்பம் பரவாமல் தடுக்கவும், டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுவது இளநீர். கோடை காலங்கள் மட்டுமின்றி எல்லாவித காலநிலைகளுக்கும் ஏற்றது.
தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் அதிக அளவு தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சியால், 7 மடங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம்.
அதேசமயம் மழைப்பொழிவு இல்லாததால், லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாசனம் செய்யும் நிலையில் தென்னை விவசாயிகள் உள்ளனர். பலரும் தென்னைக்கு மாற்றாக உள்ள விவசாயத்தை தேர்ந்தெடுக்கும் மனநிலையில் உள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், இயற்கையான இளநீர் பருக வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதற்கு தேவையான ஆதரவு நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.
இதையடுத்து, உடுமலை சுற்றுவட்டார விவசாயிகள் ஒன்றிணைந்து, முதல் முறையாக இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அவரவர் இடத்தில் இறக்கப்படும் இளநீரை, சுகாதாரமான முறையில் பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்க முடிவு செய்துள்ளனர். இதனை வாங்கிப் பருகும் பொதுமக்களால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
தேங்காய் மூலமாக தயாரிக்கப்படும் தேங்காய் பால், ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை விரைவில் சந்தைப் படுத்த உள்ளோம்” என்றார்.
இந்நிலையில், பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக விவசாயிகளே ஒன்றிணைந்து இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளனர். இவற்றை மளிகைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், உடுமலை பெரியகடை வீதியில் நேற்று நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Monday, March 13, 2017
விஜய் டிவி வழங்கும் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?
💛என்ற தேர்தலை # விஜய் டிவி நடத்தி வருகிறது
💙இதுவரை நடிகர் 🌟AJITH🌟முதலிடத்திலும்
vijay இரண்டாமிடத்திலும் உள்ளனர்
(வாக்குகள் நிலவரம்)
🌟AJITH🌟:14061930 (61.87%)
vijay : 8599564 (37.84%)
surya : 40030(0.18%)
vikram: 16459 (0.7%)
Nota: 9102(0.4% )
💗நீங்கள் வாக்களிக்க கீழே உள்ள ⬇லிங்கில் செல்லவும்
💚முடிவுகள் விஜய் அவார்ட்ஸ் 10-ல் அறிவிக்கப்படும்
💙இன்னும் இந்த போட்டி நடப்பது அதிகம்🌟அஜித்குமார்🌟 ரசிகர்களிடம் சென்றடையவில்லை உங்களால் முடிந்த அளவு அனைத்து 🌟 அஜித்🌟 ரசிகர்கள் குரூப்புகளுக்கும் பகிரவும்
Friday, March 10, 2017
விராட் கோலி மீது `பாயும்' ஆஸ்திரேலிய ஊடகங்கள்...!
ஆட்டக்களத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் அணியின ர் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் குற்றச்சாட்டுக்கள் மூர்க்கத்தனமானவை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமைமுடிவடைந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார். அவர் எதிர்முனை வீரரை கலந்தாலோசித்த பிறகு, ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வெடுக்கும் அறையை நோக்கி தான் ஆட்டமிழந்தது தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாமா என்று சைகையில் கேட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது பெரும் சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான கோலியின் விமர்சனம்
இந்நிலையில், போட்டி முடிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி, ''நான் பேட்டிங் செய்த போதே அவர்கள் இவ்வாறு இருமுறை செய்ததைப் பார்த்தேன். . அதாவது டி.ஆர்.எஸ். கேட்க ஓய்வறையை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்ப்பதை நான் இருமுறை கண்டேன். அதனால்தான் நடுவர் ஸ்மித்தை நோக்கி வந்து அவரை அனுப்பி வைத்தார்'' என்று கூறினார்.
''கடந்த 3 நாட்களாகவே ஆஸ்திரேலியர்கள் ஓய்வறை உதவியை நாடி வந்ததைக் குறிப்பிட்டேன். ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் தனது எல்லையை மீறி விட்டார்'' என்று மேலும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய ஊடகங்களின் மறுப்பும், விமர்சனமும்
விராட் கோலியின் இந்த விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய ஊடகஙகள், இந்தியாவுக்கு வருகை புரிந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு அணி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கோலி கூறுவதாக தெரிவித்துள்ளன.
'தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்' பத்திரிக்கை தனது தலைப்புச் செய்தியில், ''வரலாற்றுப் புகழ் மிக்க இந்தியாவின் வெற்றிக்கு பிறகு, ஏமாற்றுவதாக ஆஸ்திரேலியா மீது குற்றம் சாட்டுகிறார் கோலி'' என்று குறிப்பிட்டுள்ளது.
இதே போல, வேறு சில ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளும், இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையான கருத்தை வெளியிட்டதாக விமர்சித்துள்ளன..
ஆஸ்திரேலியா மீதான குற்றச்சாட்டுக்கள் ''மூர்க்கத்தனமானது''
நேர்மையற்ற முறையில் ஆஸ்திரேலியா விளையாடியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ''மூர்க்கத்தனமானவை'' என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் சதர்லேண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-2008 காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய வீரரான சைமண்ட்ஸ் குறித்து குரங்கு போல் இருப்பதாக கேலி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை ஹர்பஜன் சிங்கும், அப்போது களத்தில் இருந்த மற்ற இந்திய வீரர்களும் மறுத்தனர்.
இதற்கு பிறகு, தற்போது ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களும், அதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்களின் எதிர்வினை கருத்துக்களும், மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே மோதலை உருவாக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், விராட் கோலி, நேர்த்தியாகவும், அதேசமயம் முதிர்ச்சியுடனும் செயல்படுவதாக, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கோலிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
விராட் கோலி மீது `பாயும்' ஆஸ்திரேலிய ஊடகங்கள்

Wednesday, March 8, 2017
Suchitra leaks video
Watch out following link for more leaks video :
Check out these search results: https://twitter.com/search?q=suchitra%20leaks&s=09
Tuesday, March 7, 2017
SSLC Exam schedule-2017
DATE : PAPER
Mar 8 : Tamil I Paper
Mar 9 : Tamil II Paper
Mar 14 : English I Paper
Mar 16 : English II Paper
Mar 20 : Maths
Mar 23 : Science
Mar 28 : Social Science
Monday, March 6, 2017
ரூ.6000 கோடிக்கு ஆசைப்பட்டு நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக எம் பிக்கள்.
சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை.
40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்..
நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி.
கால அவகாசம் முப்பது வருடம்.
இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.
இதற்கான செலவு 1850 கோடிகள்.
...........................................
இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை
1850 கோடியில் எடுக்க முடியும்.
கூடுதலாக கிடைக்கும் பலன்கள்
1) பால் வளம் பெருகும்
2) விவசாயிகள் வாழ்வு மேம்படும்
3) இயற்கை வளம் மேம்படும்.
4) விவசாயம் செழிக்கும்.
5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது.
முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை.
ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை.
புரியாதவர்களுக்கு புரியவைப்போம்.
இவரகள்் தனது சுயநலத்திற்க்காக தமது தமிழ் நாட்டையே வறண்ட மாநிலமாக மாற்றி விட்டனர்.
பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச BSNL புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும் செயல்படும்.
சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டி சேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது. இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.
மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டா சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.
சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம். இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (Voice call) நன்கு தெளிவாக கேட்கும்.