News

Tuesday, February 28, 2017

Baahubali_2 The conclusion

https://www.youtube.com/watch?v=spTA7LPKROo

சீமை கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் 

சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்பணியை கண்காணிக்க மாவட்டத்துக்கு 5 பேர் வீதம் 65 வழக்கறிஞர்கள், ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

சுற்றுச்சூழலுக்கும், விவ சாயத்துக்கும் மிகப்பெரிய எதிரியான சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் ஆணையிட்டதைத் அவற்றை அகற்றும் பணிகள் காவிரி பாசன மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் எந்த பயனையும் எதிர்பாராமல் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்க வேண்டும்" என்றனர். கூடவே, "மாநிலம் முழுவதும் 10 சதவீத சீமை கருவேல மரங்களே அகற்றப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் மட்டுமே நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

பல மாவட்டங்களின் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை" என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Sunday, February 26, 2017

யோகா கலையை காப்பாற்ற வேண்டியது அவசியம.்

கோவை: ‘‘பாரம்பரிய யோகா கலையை, அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்ற வேண்டியது அவசியம்,’’ என, பிரதமர் மோடி, கோவை ஈஷா யோக மைய விழாவில் பேசினார். கோவை அருகே பூண்டி வெள்ளியங்கிரியில், ‘ஈஷா யோகா மையம்’ சார்பில், 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா பிப்24, நடந்தது.

பிரதமர் மோடி, ‘மகா யோகா யக்ஞம்’ நிகழ்ச்சியில், பங்கேற்று, சிலை பிரதிஷ்டையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய, ‘ஆதி யோகி – யோகத்தின் மூலம்’ என்ற, புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ‘எல்லோருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி, தொடர்ந்து, ஆங்கிலத்தில் உரையாற்றினார். மோடி பேசியதாவது: மகா சிவராத்திரி தினத்தில் கோவையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைகொள்கிறேன். பல விழாக்கள் உள்ளன. எனினும் சிவனுடன் நேரடி தொடர்புகொண்ட இந்த மகாசிவராத்திரி விழா மகத்துவம் வாய்ந்தது. காரணம், மகாதேவன் ஒருவர் மட்டுமே என்பதே. பல மந்திரங்கள் உள்ளன. ஆனால், வலிமை வாய்ந்தது, சிவனுடன் தொடர்புடைய, மகா மிருதஞ்சயமந்திரம். ஈசனின் சிறப்பம்சத்துக்கு இதுவே சான்று. தெய்வீக வழிபாடு மூலம் ஒற்றுமையை உணர்த்துவதே, மகா சிவராத்திரி விழா. ஜாதி, மதம், நிறம் உள்ளிட்ட அனைத்தையும் மறந்து அனைவரும் ஒன்று, என்பதை உணர்த்தும் விழா இது.

மகா சிவராத்திரி விழா, இரவு முழுவதும் தொடரும். இயற்கையை பாதுகாத்து வாழ வேண்டும் என்பதை, மனிதர்களுக்கு உணர்த்தும் விழாவாகும். எனது பூர்வீக மாநிலமான குஜராத், சோமநாதரின் பூமி. மக்கள் பணியில் அர்பணிப்புடன் ஈடுபட்டுள்ளதால், என்னை காசி விஸ்வநாதரின் பூமி அழைத்து சென்றது. சோமநாதர் பூமியிலிருந்து விஸ்வநாதர் பூமிக்கும், தற்போது கோவைக்கும் என்னை அழைத்து வந்துள்ளது. இதிலிருந்து ஒன்று புரிகிறது. சிவன் அனைத்து இடத்திலும் இருக்கிறார் என்பதை இது உணர்த்துகிறது. இத்தகைய பூமியிலிருந்து வந்த காரணத்தால், மகாசிவராத்திரி விழாவில் பற்கேற்பது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. பக்தர்கள் உலகின் பல்வேறு மூலையிலிருந்து வந்தாலும், அவர்களின் வழிபாடு முறை வேறுபட்டிருந்தாலும், எண்ணம் ஆன்மிகத்தை உணர்வதே. 
ஒவ்வொரு மனித இருதயத்திலும், இந்த ஆன்மிகத்தை உணர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

112 அடி கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை முன் நிற்கும்போது, அனைவரும் யோகத்தின் மகத்துவத்தை உணரவேண்டும் என்பதை, அது பிரதிபலிப்பது போல் உள்ளது; சிவனுடைய மகத்துவத்தை நம்மை உணரச்செய்கிறது. பிப்25, யோகா பல துாரம் கடந்து வந்துள்ளது. பல முறைகள், பல பயிற்சிகள் என வேறுபட்டுள்ளது. இதுதான் யோகத்தின் மகிமை. பல செயல்முறைகள் இருந்தாலும், பிரசித்திபெற்ற கலையாக யோகா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜீவனில் இருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கலையே யோகா. அறிவு, மனம், உடல் இவற்றை ஒருங்கிணைப்பது யோகா. மனிதர் மட்டுமின்றி, விலங்கு, பறவைகள் என சுற்றுப்புறத்திலுள்ள ஜீவ ராசிகளுக்கு ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறது யோகா. ‘நான்’ என்பதிலிருந்து, ‘நாம்’ என்ற நிலைக்கு மாற்றுவதே, இந்த யோகாவின் மகத்துவம்.

ஒற்றுமைதான் இந்தியாவின் பலம். சிவனும், பார்வதியும் ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம். சிவனின் கழுத்தில் பாம்பு உள்ளது. விநாயகரின் வாகனம் எலி. பாம்பும், எலியும் பரஸ்பர எதிரிகள். இருப்பினும் அவை ஒற்றுமையுடன் வாழ்கின்றன. முருகனிடம் பாம்பும், மயிலும் உள்ளது. இவை இரண்டும் பரஸ்பர எதிரிகள். எனினும் இவையும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன. சிவனின் குடும்பமே ஒற்றுமைக்கு உதாரணம் என்பதை, இது எடுத்துக்காட்டுகிறது. இதிலிருந்து, உலகில் ஒற்றுமை எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எங்கெல்லாம் கடவுள் வழிபாடு உள்ளதோ அங்கு, விலங்கு, பறவை, மரம் ஏதேனும் ஒன்று இருக்கும். இயற்கை கடவுளுக்கு இணையானது. இயற்கை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நம் முன்னோரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதை நாம் சிறுவயதில் இருந்து கடைபிடித்து வருகிறோம். இதனால்தான் கனிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்பண்புகள் இயற்கையாகவே நம்மிடம் உள்ளன.

நமது கலாசார வளர்ச்சியில் பெண்கள் அதிக பங்களிப்பு கொண்டுள்ளனர். பெண் என்றால் தெய்வீகம். மனிதன் நல்ல செயல் செய்தால் அவன் தெய்வீக நிலை அடைவான். இயற்கையாகவே பெண்களுக்கு தெய்வீக குணம் அவர்களுடன் ஒருசேர உள்ளது. ஆண்களே நல்ல செயல்களை செய்து மட்டுமே அந்த தெய்வீக நிலையை அடையமுடியும். மாறிவரும், 21ம் நுாற்றாண்டில் மனிதனின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. மன அழுத்தம் தொடர்பான வியாதிகள் அதிகரித்துள்ளன. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மது உள்ளிட்ட தீய பழக்கங்களை நாடுகின்றன.

யோகா பயிற்சியை மேறற்கொள்ளும்போது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன், மன அமைதியும் ஏற்படும். பாரம்பரிய யோகா கலையை அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்ற வேண்டியது முக்கியம். உடல் நலத்துக்கு யோகா ஒரு பாஸ்போர்ட்டாக செயல்படுகிறது. வியாதியற்ற உடல்நலமே மிக முக்கியம். செயல், சிந்தனை, அனைத்திலும் மனிதர்கள் நல்ல முறையில் செயல்பட யோகா உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதில் பல முறைகள் உள்ளன. உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவரும் யோகிகள் என கூறமுடியாது. யோகா மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில், வெற்றிகரமாக, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

Friday, February 24, 2017

மகா சிவராத்திரி: பலன்கள்

இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோவில்களில், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ராத்திரி என்ற சொல், சகலமும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி; மாத சிவராத்திரி; பட்ச சிவராத்திரி; யோக சிவராத்திரி; மாக சிவராத்திரி என, ஐந்து வகைப்படும்.மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி, அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி. சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தர்; இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தி; மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவர்; நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரர் வழிபாடு நடக்கும்.

இந்த நான்கு காலங்களிலும், கருவறையிலுள்ள மூலவருக்கு ஆகம முறைப்படி, அபிஷேகங்கள் செய்து, வழிபாடு நடக்கும். மூன்றாம் காலமான லிங்கோத்பவ காலம் என்பதால் கருவறைக்குப் பின் உள்ள லிங்கோத்பவருக்கு வழிபாடு நடக்கும். அப்போது, ஸ்ரீருத்ர பாராயணம்; ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்கள் உச்சரித்தல்; தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகை பாராயணம் செய்தல் ஆகியவை நடக்கும்.

கோடி புண்ணியம்: சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால், கோடி புண்ணியம் கிடைக்கும். எனவே, சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. 

*ELAIYARAJA K* Sent You a Special Happy Shivratri Surprising Wish. 🖖

*ELAIYARAJA K* Sent You a Special Happy Shivratri Surprising Wish. 🖖

_Click here to See_ -> https://fest-wishes.com/shivratri/?n=ELAIYARAJA

ஆதியோகி சிலை திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்ர.

கோவை : ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்றுவரை (பிப்ரவரி 24) கோவை வருகிறார்.

ஆதியோகி சிலை திறப்பு : கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முக தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் ஆதியோகி சிலையை மோடி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பிரதமர் வருகை : விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு பிரதமர் டில்லி செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Thursday, February 23, 2017

பூமியை போன்ற 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததுள்ளது நாசா !

வாஷிங்டன்: பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப் படுகிறது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 22, 2017

திருவணணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 24ல் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 24ல் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே, தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்தபோது, அடி, முடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்த நாள், சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. 

நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே, பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த, லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் எழுந்தருளிய திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இதை முன்னிட்டு, அருணா சலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும், 24ல் மகா சிவராத்திரி விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்க உள்ளது. அன்று அதிகாலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னிதியில் லட்சார்ச்சனை நடக்கும். மாலை, 6:00 மணிக்கு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்சம் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபடுவர். தொடர்ந்து இரவில், நான்கு கால பூஜை நடக்கும். இரவு, 8:30 மணிக்கு முதல் கால பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள, லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மகா சிவராத்திரி அன்று உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கலை அரங்கத்தில் மாலை, 6:00 மணி முதல், விடிய விடிய தேவார பாடங்கள், இன்னிசை, பரதநாட்டியம், மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tuesday, February 21, 2017

லைப் டைம் முழுவதும் குரல் அழைப்புகள் இலவசம்..! மீண்டும் பல சலுகைகளை அறிவித்தார் முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார். ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ள அனைவருக்கும் இது ஒரு மைல்கல் என்றும், ஜியோ நெட்வொர்க் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஜியோ உருவாக்கியுள்ளதாகவும், 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது பெறும் மிகிழ்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானி என்னவெல்லாம் கூறினார் என்று இங்குப் பார்ப்போம்.

170 நாட்களில் ஜியோ நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.

மொபைல் இண்டெர்னெட் பயன்படுத்துவதில் உலகளவில் இந்தியா தான் முதல் இடம்.

தினமும் 5.5 கோடி மணி நேரம் ஜியோ நெட்வொக்கில் வீடியோக்களை பார்த்து வாடிக்கையாளர்கள் மகிழ்கின்றனர்.

ஏப்ரல்1 முதல் எல்லாக் குரல் அழைப்பு திட்டங்களிலும் ரோமிங் உட்பட எல்லா இடங்களிலும் இலவசமாக அழைக்கலாம்.

ஒவ்வொரு நாளும் ஜியோ நெட்வொர்க்கினை வலுவாகவும், வேகமாகவும் பயன்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

ஜியோ நெட்வொர்க் மூலம் தினமும் 200 கோடி நிமிடங்கள் வரை இலவசமாகக் குரல் அழைப்பி செய்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

டிஜிட்டல் உலகைப் பொருத்த வரை தரவு தான் ஆக்சிஜன்.

ஜியோ நெட்வொர்க்கில் துவக்கம் முதல் ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர்.

அனைத்து நிறுவனங்களின் டெலிகாம் திட்டங்களையும் கவனித்து அவர்களை விட 20 சதவீதம் அதிக பயனையே ஜியோ அளிக்கும்.

ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெறுவார்கள்.

ஜியோ பிரைம் உறுப்பினர்கள் 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளை 303 ரூபாய் பேக் மூலமாக அறிமுக விலையில் 30 நாட்களுக்குப் பெற முடியும்.

மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்கு பிரிமியம் மெம்பர்ஷிப் பெறுவதன் மூலம் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஜியோ நியூ இயர் ஆஃபரை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியிலிருந்து ரஞ்சி, ஐபிஎல் வரை தமிழக வேகப்பந்து வீச்சாளர் "சேலத்து சிங்கம்" T.நடராஜனின் பயணம்

சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தற்போதைய தமிழக அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (முழுப்பெயர் தங்கராசு நடராஜன்) இவரை ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் தற்போதைய ஏலத்தில் ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளது.

தமிழக அணி 2011-12-ல் ரஞ்சி சாம்பியன் ஆன போது சின்னப்பம்பட்டியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் உள்ளூர் நட்சத்திரமாக திகழ்ந்தவர் டி.நடராஜன். 

தோல் பந்தில் வீசுவது பற்றி அவர் அப்போதெல்லாம் அறிந்திருக்கவில்லை. இங்கிருந்துதான் சென்னை வந்த டி.நடராஜன், தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்கு ஆடினார். தமிழ்நாடு முதல் டிவிஷன் லீக் என்பது சாதாரண விஷயமல்ல, மிகுந்த சவால் அளிக்கக் கூடியது. 

இந்நிலையில் இரண்டே ஆண்டுகளில் நடராஜனின் திறமை அடையாளம் காணப்பட்டு முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவரது பந்துவீச்சு த்ரோ என்பதாக சந்தேகம் எழ இவர் பந்து வீச்சு ஆக்சனை மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். முன்னாள் தமிழ்நாடு இடது கை பவுலர் சுனில் சுப்ரமணியத்தின் வழிகாட்டுதலில் நடராஜன் தனது ஆக்சனை சரி செய்து கொண்டார். 

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20-யில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய பவுலர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு மெருகேற்றினார். 

தற்போது ரஞ்சியிலிருந்து இன்னொரு படி முன்னேறி ஐபிஎல் 2017-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக இவர் ஆடுகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் கிங்ஸ் லெவன் அணி இவரது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம.

Monday, February 20, 2017

World faces critical situation ?

New scientific paper argues that New Zealand is geologically separate from Australia

Queenstown, on New Zealand's South Island

Geologists are calling for a land mass submerged beneath the Pacific Ocean to be recognised as Earth's eighth continent.

Satellite maps indicate the "continent" covers an area of nearly two million square miles – about two-thirds the size of Australia, says the BBC.

Scientists first detected signs of a mystery land mass in the 1990s and gave it the name Zealandia, as it lies in the area around New Zealand and includes the country's two main islands. The other 94 per cent lies deep beneath the waves.

Now, in a paper published inGeological Society of America, a team of Australian, New Zealand and French geologists claim New Zealand is geologically distinct from Australia and is actually part of Zealandia.

Co-author Nick Mortimer told The Guardian that while this represented "nothing new" to geologists in his native New Zealand, he hoped the first serious, peer-reviewed attempt to define and describe Zealandia might win the continent more international recognition.

"If Zealandia makes its way into popular culture and on to maps, that's all the validation we'll seek," he said.

However, the scientific community at large might need convincing that calling for an uninhabitable land mass deep beneath the Pacific Ocean to be named the Earth's eighth continent is a worthwhile academic endeavour.

"Claiming that Zealandia is a continent is a bit like stamp collecting," geologist Peter Cawood, from Melbourne's Monash University told Nature magazine.

Friday, February 17, 2017

தமிழகத்தின் தலை விதியை யாராலும் மாற்றவே முடியாது...!

  

மிழகத்தில் 12 நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் மறைந்து ஓரளவு தெளிவான சூழல் தென்படத்துவங்கியிருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 15 நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், பிரிவு 356ன் படி  ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.ஒரு மாநில ஆட்சியானது அரசியல் அமைப்புச்  சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் உள்ளதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரியவந்தாலோ 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் பிரகடனம் செய்யலாம்.  இந்தியாவில் ஆட்சி கலைப்பு பல முறை நடந்திருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலமுள்ளதாக சொல்லப்பட்ட சூழலில் கூட, உட்கட்சி பிரச்னை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை காரணம் காட்சி ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது.  சில சமயங்களில் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மை கொடுக்காமலும் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தோடு உள்ள ஒருவரை ஆளுநர் முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அவரின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை மீது சந்தேகம் எழுந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெரும்பான்மையை முதல்வராக பொறுப்பேற்றவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் கொடுக்கலாம். யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் ஆளுநர் ஆட்சியை கலைக்க அறிக்கை அனுப்பலாம். இதையடுத்து ஆட்சியை கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.

Thursday, February 16, 2017

How to make easy poori recipe

https://youtu.be/LOS-DzquZ4c

ISRO sets space record: Highlights of successful launch of Cartosat-2 and 103 other satellites

Indian Space Research Organisation (ISRO) set a new record in space mission achievements after it successfullylaunched 104 satellites in one go from the Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh, on Wednesday morning.

This was ISRO’s first space mission for the year 2017, and the most complicated mission it has ever carried out. Prime Minister Narendra Modi and President Pranab Mukherjee congratulated the space agency for the historic event that significantly boosts India’s space programme.

The space agency began the countdown for the launch of the Polar Satellite Launch Vehicle (PSLV)’s 39th flight on Tuesday after the Mission Readiness Review committee and Launch Authorisation Board gave its approval for lift off, ISRO said.

The PSLV-C37/Cartosat2 Series satellite mission included the primary satellite (Cartosat-2) and 101 international nano satellites. It also launched two of its own nano satellites, INS-1A and INS-1B.

The mission

PSLV first launched the 714 kg Cartosat-2 Series satellite for earth observation, followed by the INS-1A and INS-1B, after it reached the polar Sun Synchronous Orbit. It then went on to inject 103 co-passenger satellites, together weighing about 664 kg, in pairs.

ISRO scientists used the XL Variant – the most powerful rocket – earlier used in the ambitious Chandrayaan and during the Mars Orbiter Mission (MOM).